Pages

Sunday, 31 March 2013

கண்களின் பாதுகாப்பு பற்றிய தகவல்!!


          எந்தவொரு உடல் உறுப்பும், ரத்தம் அதிகமாக செல்லாமல் இருந்தோலோ, அதிகப்படியான வேலையை செய்யும்போதோ அதில் பாதிப்பு ஏற்படுகிறது.

கண்களை பாதுகாக்க:

1. உட‌ல் உறு‌ப்‌பி‌ல் ‌மிக மு‌க்‌கியமானது க‌ண். சாதாரணமாக நா‌ம் பா‌ர்‌‌ப்பதா‌ல் ‌க‌ண்களு‌‌க்கு எ‌ந்த பா‌தி‌ப்பு‌ம் ஏ‌ற்படுவ‌தி‌ல்லை. ஆனா‌ல், கண்களுக்கு மிக அருகில் அதிக ஒலியுடன் கூடிய கணினியை‌த் தொட‌ர்‌ந்து பல ம‌ணிநேர‌ங்க‌ள் பா‌ர்‌த்து‌க் கொ‌ண்டிரு‌ப்பதா‌ல் கண் பாதிக்கப்படுகிறது.

Saturday, 30 March 2013

செல்போன் அழைப்பு வந்தால் ஒளிரும் உடை


       அறிவியல் வளர்ச்சியின் பயனாக செல்போன் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், செல்போன் அழைப்பு வந்தால் அதனை உணர்த்தும் வகையில் ஒளிரும் தன்மையுடைய உடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

   லண்டனைச் சேர்ந்த பேஷன் டிசைனர் மாணவியான ஜியோர்ஜி டேவிஸ், சோனி எரிக்ஸன் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள மகளிருக்கான ஆயத்த ஆடை, செல்போன் அழைப்பு வந்தால் ஒளிர்கிறது.

இந்த உடையை ரஷ்யாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா லண்டனில் அறிமுகப்படுத்தினார்.

தனது பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஒளிரும் உடையை உருவாக்கியதாகவும், செல்போனில் உள்ள புளூ-டூத் வசதியைப் பயன்படுத்தி, இந்த ஒளிரும் உடை செயல்படுவதாகவும் ஜியோர்ஜி கூறியுள்ளார்.

பொதுவாக, டிஸ்கோதே, பார் உள்ளிட்ட அதிக சப்தம் நிறைந்த இடத்தில், செல்போன் அழைப்பு வந்தால் அது சம்பந்தப்பட்டவருக்கு கேட்காது. இதனால் அந்த அழைப்பு மிஸ்டு கால் ஆகிவிடுவதுண்டு. 

சில முக்கியமான அழைப்புகளை கூட நாம் தவறவிட்டு விடுவது உண்டு. இதுபோன்ற சங்கடங்களைத் தவிர்ப்பதற்காகவே இந்த ஒளிரும் உடையை வடிவமைத்தேன் என்கிறார் ஜியோர்ஜி.

Engineer Bedroom

Anyone need bedroom like this?

Thursday, 28 March 2013

Businessman


            பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்யும் முதியவர் ஒருவர், அந்தப் பேருந்தில் பழக் கூடையுடன் ஏறினார். 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!' என்று கூவி, பழங்களை விற்க முயன்றார். எவரும் பழம் வாங்க முன்வரவில்லை. சுமக்க முடியாமல் சுமந்தபடி முதியவர் கீழே இறங்கியதும், இளைஞன் ஒருவன் பேருந்தில் ஏறினான். 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்!' என்று கூவினான். அவனுக்கு நல்ல விற்பனை!


மற்றொரு பேருந்தில் ஏறிய முதியவர் அங்கும், 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!' என்று விற்க முயன்றார். பலன் இல்லாமல் போகவே, கீழே இறங்கி விட்டார். அடுத்து, 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்' என்று கூவியபடி அந்தப் பேருந்தில் ஏறிய இளைஞன், ஏகத்துக்கு விற்பனை செய்தான்!மிகப் பெரிய கம்பெனியின் விற்பனை ஆலோசகரான ஒருவர் இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார். முதியவரை அருகில் அழைத்தவர், "அந்த இளைஞனின் சாமர்த்தியம் உங்களிடம் இல்லையே! அவனுக்குப் போட்டியாக நீங்களும் ஆறு பழம் பத்து ரூபாய் என்று விற்றால்தானே உங்களுக்கு விற்பனை ஆகும். அதிகக் கொள்முதல் மூலம் குறைந்த விலைக்கு பழங்களை வாங்கி, லாபத்தைக் குறைத்து அதிக விற்பனை செய்யப் பழகுங்கள் தாத்தா!" என்று தனது ஆலோசனைகளை அள்ளி விட்டார்.

முதியவர் சிரித்தபடி, "போய்யா... அவன் என் மகன். இந்தப் பழமும் அவனதுதான். 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு விற்றால்... சட்டுன்னு வாங்குவதற்கு, நம்ம சனத்துக்கு மனசு வராது. அதனால் நான், 'ஐந்து பழம் பத்து ரூபாய்'னு கூவிகிட்டுப் போவேன். அப்புறமா, 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு அவன் வந்து சொன்னதும்... 'அடடே லாபமா இருக்கே'னு சனங்க சட்டுன்னு வாங்கிடுவாங்க. அவன்தான்யா நிசமான வியாபாரி. சனங்களோட மனசை மாத்தறதுக்குத்தான் என்னை முன்னாடி அனுப்புறான்!'' என்றார் முதியவர்.

கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!       ஜாவா ப்ரோக்ராம் நமது கணினியிலும், உலவியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. பெரும்பாலான இணையதளங்கள் ஜாவா ப்ரோக்ராம் பயன்படுத்துவதால் அவற்றில் உள்ள சில வசதிகளைப் பயன்படுத்த நமது உலவியில் ஜாவா நிறுவியிருப்பது அவசியமாகும். தற்போது ஜாவாவில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இந்த பாதிப்பு மூலம் ஹேக்கர்கள் உங்களை HTML கோப்பு ஒன்றை பார்க்க வைத்து அதன் மூலம் வைரஸ் அனுப்பி உங்கள் கணினியை தாக்கும் வாய்ப்பு உள்ளது. தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்படும் இந்த வைரஸ் பாதிப்பை ஜாவாவை உருவாக்கிய ஆரக்கிள் நிறுவனம் உறுதி செய்துள்ளது.

இந்த பாதுகாப்பு குறைபாட்டை சரி செய்து புதிய பதிப்பை அதிக பாதுகாப்பு வசதிகளுடன் ஜாவா வெளியிட்டுள்ளது.

நீங்கள் அவசியம்  செய்ய வேண்டியது:

1. உங்கள் கணினியில் Control Panel பகுதிக்கு சென்று Programs and features (windows 7) அல்லது Add or remove programs பகுதிக்கு செல்லுங்கள்.

2. அங்கு Java 7 Update 10 (அல்லது அதற்கு முந்தைய) பதிப்பாக இருந்தால் அதில் Right Click செய்து Uninstall என்பதை க்ளிக் செய்து அதனை நீக்கிவிடுங்கள்.

3. பிறகு java.com முகவரிக்கு சென்று ஜாவா புதிய பதிப்பான Java 7 Update 11 பதிப்பை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ளுங்கள்.

4. புதிய பதிப்பை நிறுவிய பின் உங்கள் உலவியை Restart செய்துக் கொள்ளுங்கள்.

அவ்வளவு தான்! மேலே சொன்னது எளிதாக இருந்தாலும் இதனை செய்ய வேண்டியது அவசியமானதாகும். கணினி பயன்படுத்துபவர்கள் உடனடியாக இதனை செய்யவும்.

Wednesday, 27 March 2013

காலம் பொன் போன்றது       சிலர் இணைய தளத்தில் நேரம் போவது தெரியாமல் மூழ்கி விடுவார்கள். சிலர் ஒவ்வொரு முறையும் மணிபார்க்க கடிகாரத்தை தேடுவார்கள். இப்படிப்பட்ட மணி அறியா மகான்களுக்கு உதவும் இணையதளம் இது.


இந்த இணைய தளத்திற்கு சென்றால் டிஜிட்டல் கடிகாரம் நம்மை வரவேற்கும். அந்த கடிகாரத்தில் நாம் விரும்பும் நேரத்தை தேர்வு செய்தால் போதும். அந்த நேரம் வந்தவுடன் அலாரம் சத்தமிடும். இதனால் சரியான நேரத்தில் எழுந்து கொள்ளலாம்.

நேரத்தை துல்லியமாக கணக்கிடும் `ஸ்டாப் வாட்ச்' கடிகாரமும் உண்டு. அதனைப் பயன்படுத்தி நாம் வேலைகளை எத்தனை நிமிடத்தில் முடிக்கிறோம் என்பதையும் கணக்கிடலாம்.

`காலம் பொன் போன்றது' என்ற கருத்துப்படி வாழ் பவர்களுக்கு உபயோகமான இணையதளம்.

http://onlineclock.net/

இந்தியா முழுவதும் இலவசமாக பேச..


இன்று அனைவர் கையிலும் செல் போன் உள்ளது . 80 % நபர்கள் அதில் இணையம் பயன்படுத்துகின்றனர் . நாம் இலவசமாக SMS அனுப்பும் தளங்களை பார்த்து , பயன்படுத்தி இருப்போம் . ஆனால் இலவசமாக பேச தளங்கள் உள்ளது என்பது தெரியுமா ? சில தளங்கள் இலவசம் இன்று சொல்லிவிட்டு காசை பிடிங்கி கொள்ளுவார்கள் . சிலர்  கடன் அட்டை என் இருந்தால்தான் பதிவே செய்ய முடியும் என்பார்கள் .

                    நமது ரசிகர்களுக்காக (!!!!) தேடி கண்டுபிடித்த தளம் தான் இப்பொழுது இந்தியா முழுவதும் இலவசமாக பேச வாய்ப்பு வழங்குகிறது . இது முழுக்க முழுக்க இலவசம் . 
முதலில் SITE2SMS  என்ற லிங்க் கை கிளிக் செய்யவும் .

இந்த தளத்தில் உங்கள் போன் என்னையும் , உங்கள் பயனாளர் பெயர் மற்றும் கடவு சொல்லை கொடுத்து இணைந்து கொள்ளவும் .

பின்பு கீழே உள்ளது போல ஒரு விண்டோ வரும் அதில்

SEND TEXT SMS    LIVE VOICE CALL  என இருக்கும் .
             நீங்கள் இலவசமாக கால் செய்ய விரும்பினால்  LIVE VOICE CALL என்ற பட்டனை அமுக்கவும் .

         நீங்கள் கால் செய்ய வேண்டிய என்னை டயல் செய்யுங்கள் . சில நிமிடங்களில் நீங்கள் பதிவு செய்த எண்ணுக்கு ஒரு கால் வரும் . அதை நீங்கள் எடுத்தால் நீங்கள் யாருக்கு கால் செய்திர்களோ அவருடன் இலவசமாக பேசலாம் .

வசதிகள் :

  • இந்தியா முழுவதும் பேசலாம் .
  • ஒருவருடனே எந்தனை முறை வேண்டுமானாலும் பேசலாம் . 
  • உங்கள் எண்ணில் பணம் இருக்க வேண்டிய அவசியம் .இல்லை 
  • உங்கள் மொபைல்லில் இருந்தே பேசலாம் . 
  • இலவசமாக  SMS கூட அனுப்பலாம் 
  • கண்டிஷன் 
  • ஒரு கால் ஒரு  நிமிடம் மட்டுமே நீடிக்கும் .(மீண்டும் அதே எண்ணுக்கு பேசலாம் ) 
குறிப்பு :
 தற்பொழுது DND Activate (Do Not Disturb) செய்த எண்ணிற்கு SMS அனுப்பவோ Call செய்யவோ முடியாது.


கிரிக்கெட்


          மிகத் தீவிர கிரிக்கெட் ரசிகராக இருப்பவர்களுக்கும் தெரியாத சேதி ஒன்று இருக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணி என்பது இந்திய அணி கிடையாது.

இந்திய கிரிக்கெட் வாரியம், "எங்களது அணி தனியார் அணி. எங்களுக்கும் இந்திய அரசுக்கும் சம்பந்தமில்லை" என்றது.

அதுவும் சுப்ரீம் கோர்ட்டில்!

ஆகவே, தெளிவாக ஒரு விசயத்தைப் புரிந்துகொள்ளுங்கள் கிரிக்கெட் ஆர்வலர்களே...

"இந்தியா மட்டன் ஸ்டால்" , "இந்தியா கவரிங்", "இந்தியா சால்னா கடை" என்பதுபோல இந்திய கிரிக்கெட் வாரியமும் ஒரு தனியார் கடை - அதாவது நிறுவனம்.

இதற்கும் இந்தியாவுக்கும் சம்பந்தமில்லை.

ஆகவே இந்திய அணி தோற்றால் வாடாதீர்! ஜெயித்தால் ஆடாதீர்..

Avira System Speedup


     தற்போது விண்டோஸ் இயங்குதளத்தினைக் கொண்ட கணினிகளின் செயற்பாட்டு வேகத்தினை மந்தமையாது பாதுகாப்பதுடன், வேகம் குறைந்த கணினிகளின் செயற்பாட்டை அதிகரிப்பதற்கு என Avira System SpeedUp எனும் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து வகையான விண்டோஸ் இயங்குதளங்களிலும் செயற்படவல்ல இம்மென்பொருளானது விண்டோஸ் இயங்குதளத்தின பின்னணியில் செயற்பட்டு கோளாறுகளை சுட்டிக்காட்டுவதுடன் தானாகவே சரிசெய்யக்கூடியதாக காணப்பகின்றது, அத்துடன் தேவையற்ற கோப்புக்கள், குக்கீஸ் போன்றவற்றினையும் நீக்குகின்றது.
இவை தவிர File Encryption, Startup Manager, Smart Defragmenter, Disk Analyzer, Uninstaller போன்ற வசதிகளையும் இம்மென்பொருள் உள்ளடக்கியுள்ளது.