Pages

Friday, 19 April 2013

Hangouts இப்பொழுது ஜிமெயில்லிலும்..



   கூகுள் நிறுவனத்தின் பயனுள்ள வசதிகளுள் ஒன்று Hangouts. இதன் மூலம் நாம் ஒரே நேரத்தில் 9 பேருடன் Video Chat செய்ய முடியும். ஆரம்பத்தில் கூகுள் பிளஸ் பயனர்களுக்கு மட்டுமே இருந்த இந்த வசதி இப்போது சமீபத்தில் ஜிமெயில் பயனர்களுக்கும் அறிமுகமானது. இந்திய ஜிமெயில் பயனர்களுக்கு இது கடந்த 05/02/2013 இல் அறிமுகமானது. 

ஜிமெயில் பயனர்களுக்கு என்று சொன்னாலும் Contact தேடும் போது கூகுள் பிளஸ் Circle - இல் தான் தேடுகிறது. நீங்கள் மற்றும் Hangout செய்யப் போகும் உங்கள் நண்பர்கள் கூகுள் பிளஸ் கணக்கு வைத்திருந்தால் மட்டுமே இந்த Hangouts வசதியை பயன்படுத்த முடியும். கூகுள் பிளஸ் கணக்கு இல்லை என்றால் ஒருவருடன் மட்டுமே நீங்கள் Video Chat செய்ய முடியும். 

மற்ற Video Chat வசதிகளை விட இதில் உள்ள சிறப்பம்சம் நீங்கள் உங்கள் நண்பர்களுடன் இதில் Youtube Video பார்க்கலாம், Google Docs - களை பகிர்ந்து கொள்ளலாம், கேம்ஸ் விளையாடலாம், வீடியோவில் சில Effect கொடுக்கலாம் என பல உள்ளது. 

No comments:

Post a Comment